Friday, August 18, 2017

மதுரை மல்லிகைப்பூ தோசை



தேவையான பொருட்கள்
பொரி - 2 கப்
பச்சரிசி - 1 கப்
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
வேர்கடலை எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி      
உப்புத்தூள் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :
Image may contain: food
1. பொரியை தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
2. பச்சரிசியை நன்றாக அலசி தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
3. இரண்டு மணி நேரம் கழித்து பொரியை தண்ணீரில் இருந்து நன்றாக பிழிந்து எடுத்து அதை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட்டை போல் அரைக்கவும்.
4. அந்த பொரி கலவை உள்ளேயே ஊற வைத்துள்ள அரிசியை போட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும். தேவையான அளவு உப்பையும் தண்ணீரும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
5. இந்த மாவு கலவை கொஞ்சம் தண்ணீர் போல் இருக்க வேண்டும். ஆப்ப மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
6. இப்பொழுது மாவை குறைந்தது 15 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் இந்த மாவின் அளவு கொஞ்சம் அதிகமாகி மாவின் பதம் நல்ல பொது பொது என்று இருக்கும். இதில் சோடா உப்பை போட்டு நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
7. இந்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து தோசை கல் மீது ஊற்ற வேண்டும் ஊத்தப்பம் போல் கொஞ்சம் கனமானதாக ஊற்ற வேண்டும். சிறிது வேர்கடலை எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போடாமல் எடுக்க வேண்டும்.
8. தோசையில் நிறைய சிறிய ஓட்டைகள் வர வேண்டும்.
நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் - சைவம் 

No comments:

Post a Comment