தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
உப்பு – 1 /2 தேக்கரண்டி
நெய் அல்லது எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
தண்ணீர் – 4 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு – 4 நடுத்தரமானது( தோலை சீவி ஒரு இன்ச் அளவு வெட்டிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி நறுக்கியது – 1 மேசைக்கரண்டி
மல்லித்தழை – 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் – 3 மேசைக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 /2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
அம்ச்சூர் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 /2 தேக்கரண்டி
எலுமிச்சைசாறு – 2 மேசைக்கரண்டி
மாவு தண்ணீர் – 2 தேக்கரண்டி மாவு(இதனுடன் 1 /4 தேக்கரண்டி தண்ணீரை கலக்கவும்)
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு சேர்க்கவும். அதில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசறவும்.அது பிரட் தூள் போல இருக்க வேண்டும்.
இதில் கொஞ்சம் கொஞ்சமாக 4 மேசைக்கரண்டி தண்ணீரை சேர்த்து கெட்டியான உருண்டையாக உருட்டவும்.உருண்டை மெதுவாக இருக்கும் வரை அடித்துப் பிசையவும்.

மாவை 30 நிமிடம் அல்லது அதற்கு மேலும் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் 5 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வதக்கவும்.
வதங்கியவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும்.
இதனுடன் உருளைக்கிழங்கு,மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா தூள், அம்ச்சூர் தூள், கரம் மசாலா, எலுமிச்சைசாறு இவற்றை சேர்த்து வதக்கி வேக விடவும். பிறகு இந்த கலவையை ஆற விடவும்.
ஊற வைத்துள்ள மாவை 8 உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாகத் தேய்த்து அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
அதை முக்கோண வடிவமாகச் செய்து, அதனுள் மசாலாவை வைத்து மூடவும். ஓரங்களை மாவு தண்ணீரால் ஒட்டி விடவும்.
இவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
மூலம் : சாந்தா சுந்தரம் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment