செய்ய தேவையானவை:
இட்லிகள் - 5
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்வது எப்படி

முதலில் இட்லிகளை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பின்பு அதனோடு இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் எண்ணையில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
சுவையான ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் தயார்.
நன்றி : சாந்தா சுந்தரம் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment