இந்த பொங்கல் பிரமாதமாக , சுவையாக இருக்கும்.
இதற்கு அம்மிகல்லில் அரைத்த தேங்காய்+ வேர்க்கடலை+பச்சைமிளகாய் சட்னி மற்றும் பாசிபருப்பு+ கத்திரிக்காய் சாம்பார் சரியான பக்க உணவாகும்.
தேவையான பொருட்கள்
புது பச்சை அரிசி - 200 கிராம்
பாசிபருப்பு - 100 கிராம்
குறுமிளகு - 18
முழு முந்திரி பருப்பு - 18
பசு நெய் - 6 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பசும்பால் - 4 மேஜைக்கரண்டி
தண்ணீர் (1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் )
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
பாசிபருப்பு - 100 கிராம்
குறுமிளகு - 18
முழு முந்திரி பருப்பு - 18
பசு நெய் - 6 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பசும்பால் - 4 மேஜைக்கரண்டி
தண்ணீர் (1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் )
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு தூள் தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கனமான அகன்ற இரும்பு வடச்சட்டியில் எண்ணெய் விடாமல் பாசிபருப்பு மற்றும் புது பச்சை அரிசி 3 நிமிடங்கள் மணம் வீசும் வரை வறுத்து நன்றாக ஆறவைத்து கொள்ள வேண்டும்.
1. ஒரு கனமான அகன்ற இரும்பு வடச்சட்டியில் எண்ணெய் விடாமல் பாசிபருப்பு மற்றும் புது பச்சை அரிசி 3 நிமிடங்கள் மணம் வீசும் வரை வறுத்து நன்றாக ஆறவைத்து கொள்ள வேண்டும்.
3. பிரஷர் குக்கரில் அரிசி மற்றும் பாசிபருப்பை சேர்த்துகோங்க அதனுடன் 1 கப்புக்கு 4 கப் தண்ணீர்சேர்த்துகோங்க அதனுடன் தேவையான அளவிலான உப்புத்தூள் , இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதனுடன் பசும்பாலை சேர்த்துகோங்க நன்றாக கலந்து கொள்ளவும்.
4. இப்பொழுது பிரஷர் குக்கரின் மூடியை மூடி 10 விசில் வரை விட்டுகோங்க அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு 20 நிமிடங்கள் ஆவி அடங்கும் வரை காத்து இருக்கவும்.
5. இச்சமயத்துல வடச்சட்டியில் ஒரு மேஜைக்கரண்டி பசு நெய்யை விட்டு சூடாக்கி அதில் முழு முந்திரி பருப்பை பக்குவமாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
6. சீரகத்தையும் , குருமிளகையும் நன்றாக ஒன்றுக்கு இரண்டாக அம்மிகல்லில் பொடித்து கொள்ள வேண்டும்.
7. இச்சமயத்துல 1 மேஜைக்கரண்டி பசு நெய்யை வடச்சட்டியில் விட்டு சூடாக்கவும் அதில் பொடித்து வைத்துள்ள குருமிளகு மற்றும் சீரக பொடியை சேர்த்துகோங்க ஒரே நிமிடம் வறுத்து எடுத்து விட வேண்டும்.
8. 20 நிமிடங்கள் கழித்து பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அதில் 4 மேஜைக்கரண்டி நெய்யை விட்டுகோங்க அதில் பெருங்காயத்தூள் மற்றும் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை நன்றாக குழைய குழைய கிளற வேண்டும். இதை பிரஷர் குக்கரின் மூடியை திறந்த உடன் இதை செயல்படுத்த வேண்டும் இல்லையெனில் இருகி விடும் கிளற சிரமம் ஆகி விடும்.
9. இப்பொழுது பொடித்த குருமிளகு மற்றும் சீரகம் சேர்த்துகோங்க நன்றாக கிளறி சுடச்சுட சுவையான பிரமாதமான பொங்கல் ரெடி.
நன்றி : பத்மாவதி - அறுசுவை சமையல் - சைவம்

No comments:
Post a Comment