Sunday, August 20, 2017

கலர்ஃபுல் சில்லி பரோட்டா

*தேவையானவை:
பரோட்டா – 10, மைதா – அரை கப், 
சோள மாவு – முக்கால் கப், 
ஃபுட் கலர் (சிவப்பு) – ஒரு சிட்டிகை, 
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், 

வெங்காயம் – ஒன்று, 
பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, குடமிளகாய் – ஒன்று, பூண்டு – 6 பல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
*👇🏿செய்முறை:👀*
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். குடமிளகாயை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கி, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்.*
Image may contain: food
*மைதாவுடன், அரை கப் சோள மாவு, உப்பு, ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். பரோட்டாக்களை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.*
*வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி… மிளகாய்த்தூள், பொரித்தெடுத்த பரோட்டா துண்டுகள் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள கால் கப் சோளமாவை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து பரோட்டா கலவையில் ஊற்றிக் கிளறி இறக்கவும். வதக்கி வைத்த குடமிளகாயை மேலே தூவவும்.*
*தயிர் பச்சடி, இதற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.*
நன்றி : பத்மாவதி - அறுசுவை சமையல் - சைவம் 

No comments:

Post a Comment