தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு
காரட் - 2 (துருவியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
கார்ன் பிளார் (சோளமாவு)- 2 தேக்கரண்டி
ரஸ்க் தூள் - தேவையான அளவு
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு
காரட் - 2 (துருவியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
கார்ன் பிளார் (சோளமாவு)- 2 தேக்கரண்டி
ரஸ்க் தூள் - தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் நன்கு மசித்த உருளைகிழங்கு, துருவிய காரட், பச்சைப் பட்டாணி, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது)
2. ஒரு கப்பில் சோளமாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவைக்கவும்.
3. பிசைந்து வைத்த மசாலாவை சிறு உருண்டைகளாக எடுத்து கட்லெட் வடிவில் செய்து அதை சோளமாவு கலவையில் லேசாக டிப் செய்து உடனே ரஸ்க் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5.சுவையான மொறு மொறு வெஜிடபிள் கட்லெட் தயார்.
இதை Tomato Sauce உடன் பரிமாறலாம்.
மூலம் : சாந்தா சுந்தரம் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment