இது கொங்கு பகுதிகளில் வெந்தய இட்லி சுட்டு அதற்கு இந்த தக்காளி கொத்சு பரிமாறப்படும்.
மழைகாலங்களில் சூடான இட்லி மற்றும் தோசைக்கு குளிரான இரவில் சாப்பிட மிகவும் நாவிற்கு சுர்ர்ர் என்று இருக்கும்.
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி 6 ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி 2 இஞ்ச் ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
பூண்டு 12 பற்கள் ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
பச்சை மிளகாய் 4 ( அம்மிகல்லில் நசுக்கியது)
பொடித்த வெல்லம் 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தேங்காய் பால் 1 1/2 கப்
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம்
செய்முறை
1. ஒரு கனமான அகன்ற வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு , உளுந்து , சீரகம் , கறிவேப்பில்ல மற்றும் பெருங்காயம் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
2. அதில் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
3. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக சில நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
5. அதில் மஞ்சள்தூள், வரமிளகாய் தூள், பொடித்த வெல்லம் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க , அடுப்பை சிறுதீயில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
6. இந்த சமயத்துல எண்ணெய் பிரிந்து வந்து எண்ணெய் மிதக்கும் அந்த சமயம் தேங்காய் பாலை சேர்த்துகோங்க சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment