Tuesday, August 22, 2017

எள்ளு உருண்டை

தேவையானப்பொருட்கள்:
எள் - 1 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் பொடித்தது - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:
வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு, நன்றாக வெடித்து பொரியும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும். 
Image may contain: foodஆறியபின் மிக்ஸியில் போட்டு 2 அல்லது 3 சுற்றுகள் வரை அரைக்கவும். 
அத்துடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் ஓட விடவும். கடைசியில் ஏலக்காய்த்தூளையும் சேர்த்து 1 அல்லது 2 சுற்றுகள் சுற்றி எடுக்கவும். 
சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டைகளாக பிடிக்கவும்.
நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் - சைவம் 


No comments:

Post a Comment