Monday, August 28, 2017

மினி காரா சேவ் !!!

தேவையானா பொருட்கள் 
கடலை மாவு - 3 கப், 
பதப் படுத்திய பச்சரிசி மாவு - 1 1/2 கப்,
சிவப்பு மிளகாய் தூள் அல்லது பொடித்த மிளகு - 1 டீஸ்பூன், 
கறிவேப்பிலை பொரித்தது - சிறிது (அலங்கரிக்க), 
சூடான எண்ணெய் - 4 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை 
Image may contain: foodஅரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்றாகச் சலித்துக் கொள்ளவும். இத்துடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சூடான எண்ணெய் சேர்த்துக் கலந்து மூன்று பகுதிகளாக மாவை பிரித்து வைத்துக் கொள்ளவும். கடாயை எண்ணெய் விட்டுக் காய வைக்கவும். ஒவ்வொரு பகுதி மாவையும் தனியாக எடுத்து, போதுமான தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு பதத்துக்கு மென்மையாகப் பிசையவும். இதனை காரா சேவு முறுக்கு அச்சில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் நேரடியாகப் பிழிந்து, நன்கு வறுபட்டதும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வந்ததும் கரண்டியால் வடித்து எடுக்கவும். கறிவேப்பிலையால் அலங்கரிக்கவும்.
மூலம் : பிரபா ஸ்ரீதரன் - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment