Monday, August 28, 2017

நெய்யுருண்டை

தேவையான பொருட்கள்
முழு உருட்டுக் பொரிகடலை - 1. டம்ளர்
சர்க்கரை - 1 டம்ளர்
ஏலக்காய் - 5
நெய் -. ஒருடம்ளர்

செய்முறை: 
1.முதலில் ஏலக்காயை வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுத்து, பின் பொரிகடலையுடன்சேர்த்து மிக்சியில் நன்கு பொடிக்கவும்.

2.பின் சர்க்கரையையும் மிக்சியில் நன்கு பொடிக்கவும். லேசாகப் பிறுபிறுப்பாய் இருந்தால் பரவாயில்லை!!
3.பின் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியைக் காயவைக்கவும்.நெய்யை ஊற்றி நன்கு சூடாக்கவும். புகையக் கூடாது.
4.பொரிகடலை சர்க்கரைக் கலவையை நன்கு கிண்டி விட்டுக் கொள்ளவும்!!
5.நெய் நன்கு சூடானதும், ஒரு கரண்டி எடுத்து மாவின் மேல் ஊற்றினால், சுர்ரென்ற சப்தத்தோடு, நுரைத்துப் பொங்கி வரும்!
Image may contain: food
6. இதுதான் சரியான பதம்.இந்தப் பதத்தில் நெய்யை முக்கால்வாசியை மாவில் கொட்டி, நன்கு அடி வரை கிளறி வைக்கவும் சர்க்கரை சூட்டில் நன்கு இளகி நிற்கும்.
7.சற்று சூடு ஆறியதும், மாவைக் கைகளால் பிசைந்து விட்டு, கைகளால் நன்கு அழுத்தி உருண்டைகளாய்ப் பிடிக்கவும்.
8.நெய் பத்தாதது போல் தோன்றினால் , மீதமுள்ள நெய்யும் சூடாக்கி விட்டுப் பிசைந்து கொள்ளவும ஆறியதும் உருண்டைகள் நன்கு இறுகி, கெட்டிப்பட்டு விடும்.
9. அப்போது ஒரு ஈரமில்லாத சட்டியில் எடுத்து வைத்து மூடவும்.
10.இது மிகவும் சுவையான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. வளரும் குழந்தைகளுக்கு பொரிகடலையில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் சத்தானது! பிடித்தமானதும் கூட!!!!!!
மூலம் : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment